மாரி செல்வராஜின் அடுத்த படம் இதுவா? உற்சாகத்துடன் தயாராகும் இளம் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்து தகவல் கசிந்துள்ளது.
’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதன்பின்னர் ‘கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மாரி செல்வராஜ் பிசியாக உள்ளார். இந்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் ஓடிடி நிறுவனத்திற்காக தயாராக உள்ளதாகவும் இதில் கலையரசன் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை தான் மாரி செல்வராஜ் அடுத்து இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த தகவல் ஏற்கனவே கடந்த ஆண்டே வெளியான நிலையில் தற்போது அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கபடி விளையாட்டின் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக துருவ் விக்ரம் உற்சாகத்துடன் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments