அடுத்த படம் இந்த நடிகருடன் தான்.. உறுதி செய்த மாரி செல்வராஜ் ..!

  • IndiaGlitz, [Tuesday,January 31 2023]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவலை அவரே கூறியுள்ளதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் ’வாழை’ என்ற திரைப்படத்தை ஓடிடிக்காக இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’வாழை’ புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் தனது அடுத்த படம் துருவ் விக்ரம் நடிக்கும் படம் என உறுதி செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த படம் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வேறு படங்களில் கமிட் ஆனதால் தாமதமானது என்றும் தனது அடுத்த படம் துருவ் விக்ரம் படம் தான் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். கபடி விளையாட்டை பின்னணியாக கொண்ட அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜுடன் இணையும் இந்த படம் துருவ் விக்ரமுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட்.. 'தளபதி 67' அப்டேட்டால் ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

வனிதா விஜயகுமாரா இது? லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட்  போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இது போட்டோவா? பெயிண்டிங்கா? பிரபல நடிகையின் செம புகைப்படம்..!

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையின் செம புகைப்படம் ஒன்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது புகைப்படமா? அல்லது பெயிண்டிங்கா? என ரசிகர்கள்

விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய விஜய்யின் குடும்ப உறுப்பினர்.. வைரல் புகைப்படங்கள்!

கேப்டன் விஜயகாந்தின் திருமணநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரை நேரில் சந்தித்து விஜய்யின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி

'தளபதி 67' படக்குழுவினர்களுக்காக தனி விமானம், தனி கவுண்டர்.. வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளிவந்தது என்பதும் இந்த படத்தில் பணி புரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம்.