மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் செம அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மாரி செல்வராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘வாழை’ என்ற திரைப்படத்தை தொடங்குவதாக அறிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ‘வாழை’ என்ற படத்தை தயாரித்து இயக்குவதாக மாறி செல்வராஜ் அறிவித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘வாழை’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும் உறுதுணையாக நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியும் பிரியமும் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்த படத்திற்குதேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout