'மாமன்னன்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாரி செல்வராஜ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 'மாமன்னன்’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முதல் கட்டமாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த வடிவேலு தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்கி உள்ளதாக கூறிய மாரி செல்வராஜ் இது குறித்த சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் வடிவேலு, பகத் பாஸில், ரவீனா ரவி உள்பட பல நடித்துள்ளனர் என்பதும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும் செல்வா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஏற்கனவே நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் ’வாழை’ என்ற திரைப்படத்தை ஓடிடிக்காக இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார் என்பதும், கபடி விளையாட்டை பின்னணியாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Our favourite #Vadivelu sir starts dubbing for #MAAMANNAN 👏❤️@Udhaystalin @mari_selvaraj @arrahman @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/8KWjXJ1718
— Red Giant Movies (@RedGiantMovies_) March 2, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com