மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் வாரிசு நடிகர்?

’பரியேறும் பெருமாள்’ என்ற முதல் படத்திலேயே தமிழ் திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடித்துவரும் ’கர்ணன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ’ஆதித்யவர்மா’ என்ற படத்தில் அறிமுகமாகி தனது நடிப்பு திறமையை நிரூபித்த துருவ், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.