துருவ் விக்ரமின் மூன்றாவது படம்தான் இயக்குனரின் மூன்றாவது படம்: சுவராசியமான தகவல் 

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான ‘ஆதித்யவர்மா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் அந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது தந்தை விக்ரமுடன் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துருவ்விக்ரம் நடிக்கவிருக்கும் மூன்றாவது திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. துருவ் விக்ரம் மூன்றாவது படத்தை ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தை இயக்கி அதன் பின்னர் தனுஷின் ’கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் தான் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் துருவ் விக்ரமுக்கு மட்டுமின்றி மாரி செல்வராஜ்க்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கர்ணன்’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளில் இருக்கும் மாரி செல்வராஜ் அந்த படத்தை முடித்தவுடன் துருவ் விக்ரம் படத்தை இயக்குவார் என்றும் அதற்குள் கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் துருவ் விக்ரம் நடித்து முடித்துவிட்டு, மாரி செல்வராஜ் படத்திற்கு தயாராகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் இரண்டு இளைய தலைமுறை நட்சத்திரங்கள் ஒரு படத்தில், அதுவும் தங்களது மூன்றாவது படத்தில் இணைய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.