'பரியேறும் பெருமாள்' பட இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 14 2018]

சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. கோலிவுட் திரையுலகினர், ஆன்லைன் விமர்சகர்கள், சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்பட அனைத்து தரப்பினர்களும் இந்த படத்தை கொண்டாடினர்.

இந்த படத்தை இயக்கிய மாரிசெல்வராஜுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா முதல் பலர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு மாரி செல்வராஜூக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். முதல் படத்தில் தனது திறமையை நிரூபித்த மாரிசெல்வராஜ், இரண்டாவது படத்தை தனுஷுடன் இணைந்து வித்தியாசமாக தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.