உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்: 'மாமன்னன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,June 16 2023]

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிய ‘மாமன்னன்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

‘நான் பாடிக் கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம், அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன், என் வயிற்றில் இருந்து குடலை உருவி அதை தெருத்தெருவாக விட்டு வருவேன், உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்ற வடிவில் வசனத்துடன் இந்த டிரைலர் தொடங்குகிறது.

இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் பகத் பாசில் ஆகியோர்களின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், வடிவேலுவின் அபாரமான காட்சிகள் ஆகியவற்றுடன் மாரி செல்வராஜின் முந்தைய பட பாணியில் இந்த படத்தின் டிரைலர் உள்ளது. 3 நிமிடத்திற்கு மேலாக இருக்கும் இந்த ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியதால் கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் அண்ணாவின் பிறந்த நாளில் வெளியாவது இதுதான்: லோகேஷ் செம்ம அப்டேட்..!

 தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் 22 ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் சிறப்பு விருந்தினர் கங்கை அமரன்.. திடீரென கோபப்பட்டதால் பரபரப்பு..!

சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் சித்ரா, ஆனந்த் வைத்தியநாதன்,

உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் 8 வயது அரியலூர் சிறுமி சாதனை!

ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அரியலூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி சாதனைப் படைத்துள்ளார்

நானும் விக்ரமும் சேர்ந்து நடித்தோம், ஆனால் அது வெளியாகவே இல்லை: மீனா வருத்தம்..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், அஜித், விஜய், உள்பட பிரபல நடிகர்களுடன்  நடிகை மீனா நடித்த நிலையில் விக்ரமுடன் அவர் நடித்த ஆல்பம் பாடல் வெளியாகாமல் உள்ளது

மாணவர்களை சந்திக்கும் விழா.. ரசிகர்களுக்கு விஜய் போட்ட நிபந்தனை..!

 தளபதி விஜய் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு தொகுதிகளிலும் முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவ மாணவிகளை சந்திக்கிறார் என்றும் இந்த சந்திப்பின்போது அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க உள்ளார்