துருவ்-மாரிசெல்வராஜ் படத்தின் டைட்டில் இதுவா?

’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்றும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் தூத்துக்குடியை சேர்ந்த கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்றும் இதற்காக தூத்துக்குடியிலிருந்து கபடி வீரர்கள் வரவழைக்கப்பட்டு துருவ் விக்ரமுக்கு கபடி பயிற்சி அளித்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’கபடி வீரர்’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட நடிகர் நடிகைகளின் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூற படுகிறது.
 

More News

நடிகர் விமல் கொடுத்த புகார்… தயாரிப்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு!

“களவாணி“ படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகர் விமல் தன்னிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக சினிமா தயாரிப்பாளர்

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் அரேபியன் பாடலா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தெரிந்ததே.

ஹரி-அருண்விஜய் படத்திலிருந்து விலகிய பிரகாஷ்ராஜ்....! அந்த ரோலுக்கு பிரபல இயக்குனர்....?

அருண் விஜய்-க்கு அண்ணனாக நடிக்க, நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களை ஒப்பந்தம் செய்திருந்தனர்

சினிமாவில் அறிமுகமாகும் விஷால் பட நாயகியின் மகள்!

நடிகர் விஷால் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகையின் மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

முடிவுக்கு வந்தது ஷங்கர் பட பிரச்சனை: விரைவில் படப்பிடிப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படம் ஒன்று நீண்டகாலமாக பிரச்சனையில் இருந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முயற்சியால் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால்