close
Choose your channels

ஒரே ஜாதியா இருந்தாலும் தலக்கட்டு வேற வேற தான.. 'மார்கழி திங்கள்' டிரைலர்..!

Wednesday, September 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’மார்கழி திங்கள்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த டிரைலரில் பள்ளியில் படிக்கும் போது இரண்டு பேர் காதலிக்கின்றனர், அந்த காதல் இரு குடும்பத்திற்கு இடையே ஏற்படும் பிரச்சனை, ஜாதி விவகாரம் மற்றும் அந்தஸ்து விவகாரம் காரணமாக பிரிக்கப்படுகிறது

இதனை அடுத்து காதலர்கள் என்ன ஆனார்கள்? காதலர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் அவமானங்கள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

நாயகியின் தாத்தாவாக நடித்திருக்கும் பாரதிராஜா வழக்கம்போல் தனது மெருகேற்றிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆன இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் ஷ்யாம் செல்வன் மற்றும் ரக்ஷனா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது இசைஞானி இளையராஜா தான். பின்னணி இசையில் அசத்தியுள்ளார். மொத்தத்தில் மனோஜ் பாரதிராஜாவின் முதல் படமே வெற்றிப் படம் என்பது இந்த ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment