கொரோனா 'கிட்'களை கொள்ளையடித்த குரங்குகள்: பொதுமக்கள் அச்சம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் தாக்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு வைத்திருந்த ரத்தமாதிரிகள் மற்றும் கொரோனா கிட்’களை குரங்குகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் மருத்துவக் கல்லூரியின் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென குரங்குகள் கூட்டமாக வந்து பரிசோதனை கூடத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகள் மற்றும் பரிசோதனைக்கு உதவும் கிட்களை கொள்ளையடித்து கொண்டு சென்றன
இந்த நிலையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகள் மற்றும் கிட்களை எடுத்து சென்ற குரங்குகள் மரம் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு அவற்றை கடித்து துப்பியது அப்பகுதி மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமாக குரங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் அந்த பகுதி மக்களுக்கு நிலவியுள்ளது
ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது குரங்குகள் உள்பட விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Monkeys run away with #Covid_19 test samples after attacking lab technician' !!#monkeys are eating our lab #PPE and stealing samples, #locust are eating up crops, #trains are wandering around !!
— Shahid Khan (شاہد خان) (@backbencher__) May 29, 2020
Are we the new Jumanji movie ?#lockdownextension #CoronaVirusUpdates@salonayyy pic.twitter.com/m5HOqvIg2M
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments