மரண மாஸ் தலைவர் குத்து: 'பேட்ட' சிங்கிள் குறித்து கார்த்திக் சுப்புராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது. ரஜினி படத்திற்கு முதன்முதலாக இசையமைக்கும் அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் எந்த வகை பாடலாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்த நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி வெளிவரவுள்ள 'பேட்ட சிங்கிள் பாடல் ஒரு மரண மாஸ் பாடல் என்றும், அனிருத் இசையில் உருவான 'தலைவர் குத்து' பாடலை வரவேற்க தயாராகுங்கள்' என்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இதில் இருந்து இந்த பாடல் ஒரு அட்டகாசமான குத்துப்பாடல் என்றும், இந்த பாடல் வெளிவந்து இணையதளங்களை கலக்கப்போவதாகவும் ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, இயக்குனர் மகேந்திரன், மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், குருசோமசுந்தரம், சனத் ரெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
#PettaFirstSingle .. The #MaranaMass from Dec 3rd... Just 2 days to go...
— karthik subbaraj (@karthiksubbaraj) December 1, 2018
Can't wait for u all to listen to #ThalaivarKuththu
An @anirudhofficial musical.... pic.twitter.com/J3Nns463sO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments