'மரண மாஸ் தலைவர் குத்து' பாடலை பாடியவர்கள் யார் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,December 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மரணமாஸ் தலைவர் குத்து' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. தலைவர் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கும் அனிருத், இந்த பாடலை வேற லெவலில் கம்போஸ் செய்து பட்டையை கிளப்பியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பாடலை பாடியவர்கள் குறித்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன்படி இந்த பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

ரஜினி படத்தின் அறிமுகப்பாடல் என்றாலே எஸ்பிபி பாடிய பாடலாகத்தான் கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் ஒருசில படங்களில் மட்டும் எஸ்பிபியை ரசிகர்கள் மிஸ் செய்தனர். அந்த குறையை அனிருத் 'பேட்ட' படத்தில் போக்கிவிட்டார். எனவே நாளை ரஜினி ரசிகர்களுக்கு செம இசை விருந்து காத்திருக்கின்றது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.

More News

அரசியல் மிகப்பெரிய ஆபத்தான விளையாட்டு: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாக சென்ற ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார்.

உலக அளவில் டுவிட்டர் செல்வாக்கு பெற்ற ஒரே தமிழர்

2018ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு உலக அளவில் டுவிட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது.

மீண்டும் லைகாவுடன் இணையும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.

அரசியல்வாதிகள் தான் உண்மையில் தேசிய பேரிடர்கள்: கமல்ஹாசன்

கடந்த பிப்ரவரி மாதம் உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்த பின்னரும், கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், அதிமுக அமைச்சர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டே வந்தது

தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்த இணையதளத்தை அசைக்க முடியவில்லை