மழையால் தள்ளிப்போன 'மறக்குமா நெஞ்சம்': புதிய தேதியை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்த இருந்த ’மறக்குமா நெஞ்சம்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய தேதியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்
சென்னை பனையூர் அருகே கடந்த 12ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி நடக்க இருந்தது. இந்த இசை நிகழ்ச்சியை காண மதுரை, பெங்களூர் உள்பட பல நகரங்களில் இருந்து சென்னைக்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்
ஆனால் அன்றைய தினம் பெய்த கனமழை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனை அடுத்து ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் ’சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடிய அளவில் உள் அரங்குடன் கூடிய வசதியை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
இதற்கு உடனடியாக பதில் அளிக்க முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் கலைஞர் பெயரில் அனைத்து வசதியுடன் கூடிய உள் அரங்கம் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மழையால் ரத்து செய்யப்பட்ட ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி அதே சென்னை பனையூரில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் ஏற்கனவே பெற்ற டிக்கெட்டுகளை பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறலாம் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com