'மரகத நாணயம்' திரைமுன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பேய்க்கதை டிரெண்ட் இன்னும் கோலிவுட்டில் முடியாமல் அவ்வப்போது பேய்க்கதை திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பேய்க்கதையுடன் ஒரு மரகத நாணயத்தையும் சேர்த்து விறுவிறுப்பாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் 'மரகத நாணயம்'.
ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், முனிஷ்காந்த், கோட்டா சீனிவாசராவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியுள்ளார். இவர் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமாரின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திபு நைனன் தாமஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை தில்லிபாபு தயாரித்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் டிரைலரில் உள்ள காட்சிகள் விறுவிறுப்புடனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'இன்று நேற்று நாளை' போலவே இந்த படத்தின் கதையும் கொஞ்சம் வித்தியாசமானதுதான். மன்னர் காலத்தை சேர்ந்த ஒரு மரகத நாணயம் பற்றிய ஒரு குறிப்பு கிடைக்கின்றது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள அந்த மரகத நாணயத்தை அந்த குறிப்பின் உதவியால் ஆதி தலைமையில் ஒரு குரூப்பும், வில்லன் கோட்டா சீனிவாசராவ் தலைமையில் ஒரு குரூப்பும் தேடுகின்றனர். இவர்களில் யாருக்கு அந்த மரகத நாணயம் கிடைத்தது, இடையில் வரும் மரகத நாணயத்துக்கு சொந்தக்காரராக இருந்த பேய் யாருக்கு உதவி செய்தது என்பது தான் இந்த படத்தின் கதை.
மன்னர்கள் காட்சியும் தற்கால காட்சியும் மாறி மாறி வரும் இந்த படத்தில் சீரியஸ் காட்சிகளும் காமெடி காட்சிகளும் சம அளவில் கலந்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை ரசிப்பார்கள் என்று இந்த படத்தின் இயக்குனர் சரவணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout