கமலுடன் இணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்
- IndiaGlitz, [Monday,February 20 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் தற்கால சமூக, அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். அவருடைய சமூக வலைத்தள கருத்துக்களில் தெளிவான சிந்தனையும், ஆக்கபூர்வமான அறிவும் கலந்திருப்பதாகவே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடைய கருத்துக்கள் 90% தமிழக மக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக உள்ளது.
பொறுக்கிகள்' என்று தமிழர்களை கடுசொற்களால் வசைபாடிய சுப்பிரமணியன் சுவாமிக்கு கூட கமல் தன் எதிர்ப்பை நாகரீகமான வார்த்தைகளினால் மட்டுமே தெரிவித்தார். எந்த விதத்திலும் அவர் வன்முறையை தூண்டும்படியோ அல்லது அநாகரீகமான கருத்துக்களையோ சொல்லவில்லை என்பதுதான் நடுவிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் இன்று ஒரு கட்சி அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு புகார் செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும் கமலுக்கு ஆதரவு தெரிவித்தும் சமூக வலைத்தளத்தில் #TNstandswithkamal என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அதில் இளைஞர்கள் கமலுக்கு ஆதரவான தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கமல் கேட்கும் நாகரீகமான கேள்விகளுக்கு உரிய முறையில் பதில் சொல்வதுதான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அதைவிட்டு விட்டு அவர் மீது வழக்கு போடுவதால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.