தங்கைக்காக வருத்தப்படாத நாளே இல்லை சீமானின் தாயார் பகிர்ந்த உண்மைகள்.
- IndiaGlitz, [Thursday,April 11 2024]
தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர்,தமிழக அரசியல்வாதியாகவும் மேலும் நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்தும் சீமான் அவர்களின் தாயார் அன்னம்மாள் அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலில் அளித்த பேட்டியில்,
என் மகன் இது போன்ற கட்சியை ஏற்று நடத்துவது மிகவும் சந்தோஷமாக இருக்கு.பேச்சில் அதிக ஆர்வம் கொண்டவன்.அவன் இந்த மாதிரியான சமூக அக்கறையோடு மேடையில் ஏறி பேசுவதை கல்லூரி காலத்திலேயே ஆரம்பித்து விட்டான்.எல்லாவற்றிலும் ஆர்வமாக கலந்து கொள்வது,யாருக்காவது பிரச்சனை என்றால் உடனே ஓடுவது,நாடகத்தில் நடிப்பது,பாட்டு பாடுவது,என அனைத்திலும் ஆர்வம் கொண்டவன் என் மகன்.இப்பவும் மாறாம அப்படியே இருக்கான்.
என் மகன் சினிமாவில் நடிகராக இருக்கும்போது எனக்கு அது ஒரு வகையில் பிடித்தது.ஏனென்றால் அது எந்த வித தொந்தரவும் இல்லாமல் அமைதியாக போய் கொண்டிருந்தது.இப்போது அரசியலில் இருக்கும்போது அது எல்லா வகையான தொந்தரவையும் கொடுக்கிறது.யாராவது ஏதாவது சொல்லி கொண்டே இருக்கிறார்கள்.எனக்கு கஷ்டமா இருக்கு.
இன்று என் மகன் வேறு ஏதாவது ஒரு வேலை பார்த்தால் நானும் சரி என் மகனும் சரி பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருந்து இருப்போம்.அரசியல் வேலையில் என மகனை விடும்போது நிம்மதி இல்லை இருந்தாலும் இப்போது எல்லாவற்றிக்கும் துணிந்த மனநிலை வந்து விட்டது.நான் போகாதே என சொல்லவில்லை.சொல்லி இருந்தாலும் என் மகன் கேட்டு இருக்க மாட்டான்.
நான் இப்போது என் மகனுக்கு மட்டுமே ஓட்டு போடுகிறேன்.முன்னொரு காலத்தில் கை சின்னத்திற்கு ஓட்டு போட்டு கொண்டிருந்தேன்.என்னுடைய அப்பா காங்கிரஸ் கட்சி,அதே போல் என் மகன் சிறு வயதில் இருந்தே தனிப்பட்ட முறையில் யாரிடமும் அதிகமா பேசாமல் குறிப்பாக பெண்களிடம் எப்போதும் கண்ணியமாக நடந்து கொள்வான் அதிகம் பேச மாட்டான்.வீட்டிற்கு வருகின்ற எல்லோரையும் சாப்பிட வைத்து அனுப்புவான்.நாற்பது வயதிற்கு மேல் தான் என் மகன் திருமணம் செய்து கொண்டான்.அவன் திருமணத்திற்காக என்னை பெண் பார்க்க அனுமதிக்கவில்லை.கல்யாணத்தில் துளியும் விருப்பம் இல்லாமல் இருந்தான்.மகராசி போல் என் மருமகள் வந்தாள்.
என் கணவர் இறக்கும்போது சீமான் மிகவும் மனம் நொந்து போயிட்டான்.கஷ்ட பட்டு வளர்த்த அப்பா இல்லாம போயிட்டாரேன்னு அதிகமா வருத்த பட்டான்.நான் இறந்து போனால் உண்மையில் சந்தோசம் தான் படவேண்டும்.ஏனென்றால் எனக்கு வயசாகி போச்சி.வாழ வேண்டிய என் பொண்ணோட கணவர் மருமகனே இல்லாம போயிட்டாரு.நான் வாழ்ந்து முடிச்சிட்டேன்,
இனி நான் போனாலும் பிரச்சினை இல்லை.சீமான் அவ்வளவு வேதனையை மனதில் வைத்து கொண்டு இருக்கிறான்.தங்கை நிலைமையை நினைத்து கலங்காத நாளே இல்லை.நம்ம நிலையில் நின்று நாம் கவலை பட்டால் அம்மா தங்கை நிலைமை என்ன என யோசித்து நடந்து கொள்கிறான்.
சீமானுக்கு விவசாயம் என்றால் மிக பிடிக்கும்.அப்போதில் இருந்தே சொல்லுவான்.ஆனால் இப்போது எங்க தண்ணீர் இருக்கு.கம்மாயில கூட தண்ணீ வத்தி போச்சி இருந்தாலும் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்பது என் மகனுடைய ஆசையாக இருக்கு,என சீமான் தாயார் கூறிய பல நெகிழ்ச்சியான விஷயம் மற்றும் வருத்தங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.