கைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது: சமந்தா கூறியது ஏன்?

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

இயக்குனர் பி.எஸ்,மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'இரும்புத்திரை'. நவீன டெக்னாலஜி மூலம் நடைபெறும் பொருளாதார குற்றங்கள் குறித்த இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்று கூறப்படுகிறது இந்த படத்தில் டாக்டர் கேரக்டர் ஏற்று நடித்திருக்கும் நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்த அனுபவம், மற்றும் படம் குறித்து கூறியதாவது:

இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.

எனக்கு புதுமுக இயக்குநர்களோடு  இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து  பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து , பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து  உள்ளார்கள்.

இன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இரும்புத்திரை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

விஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்று சமந்தா கூறியுள்ளார்.

இரும்புத்திரை வருகிற மே மாதம்  11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

More News

10 நாட்களில் அவெஞ்சர் தந்த ஆச்சரிய வசூல்

சமீபத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல் புரிந்து வரும் நிலையில் இந்த படம் இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாகவு

சசிகுமார் படத்திற்காக மதுரையில் போடப்பட்ட பிரமாண்டமான அரங்குகள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'நாடோடிகள்' இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'நாடோடிகள் 2' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன

சினிமாவுக்கு வந்துவிட்டார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். ஊழலை எதிர்க்கும் நேர்மையான, தைரியமான அதிகாரிகளில் மிகச்சிலரில் இவரும் ஒருவர்.

வேறு வழியில்லை, இனிமேல் சட்ட நடவடிக்கைதான்: நிவேதா பேத்ராஜ்

கடந்த சில நாட்களாக ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடிகை நிவேதா பேத்ராஜ் என கூறப்பட்ட ஒரு பிகினி புகைப்படம் வைரலாகியது.

இருட்டு அறையில் முரட்டு குத்து: மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா? 

கவுதம் கார்த்திக்,  யாஷிகா ஆனந்த், வைபவி நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்