செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல புதிய களிமண் எரிமலைகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
செவ்வாய் கிரகம் என்பது எரிமலை வெடிப்புக்கு பெயர் போனது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இந்த கிரகத்தில் எரிமலைகள் வெடிப்பதும் புதிய எரிமலைகள் உருவாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்கு நாசா முயற்சி செய்து வருகிறது. இத்திட்டத்தில் மனிதர்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளவும் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது .
இந்நிலையில் ஜெர்மனி ஏரோபேஸ் சென்டர் மேற்கொண்ட ஒரு ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் உள்ள தண்ணீர் கலந்த கலவையால் பல புதிய களிமண் எரிமலைகள் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த எரிமலைகள் பூமியில் இருக்கும் எரிமலைகள் போன்றே குறைந்த அழுத்தத்தில் செயல் படுவாதாகவும் கூறப்படுகிறது. தண்ணீர் கலவைகள் தொடர்ந்து பல புதிய எரிமலைகளை உண்டாக்குவதும் அது வெடித்து சிதறுவதும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டு இருக்கிறது. இதுகுறித்த விரிவான அறிக்கை நேச்சர் ஜியோ சயின்ஸ் ஆய்விதழில் வெளியிடப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய களிமண் எரிமலைகள் ஃபயர் பிரீதிங் வேல்கனோஸ் என்ற பெயரால் குறிப்பிடப் படுகிறது. இது செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதியில் உருவாகி இருப்பதாகவும் ஆய்வுக் குழு தெரிவித்து இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் குவிந்த அதிகபடியான மண் குவியலினால் இந்த எரிமலைகள் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. குவியல் குவியலாக இருக்கும் மண்ணானது நீரோடு சேர்ந்து கலவையாகி மண்ணிற்குள் அமிழ்ந்து பின்னர் எரிமலையாக மாறிவிடுகிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments