பெண்கள் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தமிழக முதல்வர் செயல்படுத்திய பல அதிரடி திட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பாட்டை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு அடையாளமாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை, கோவை போன்ற நகரங்களின் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு பல முன்னேற்பாடான திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பதும் கவனிக்கத் தக்கது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு தனிக்கவனம் செலுத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார். இதன்மூலம் இதுவரை 2.85 லட்சம் மகளிர்க்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள்/ செம்மறி அடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 1,11,444 கறவை மாடுகளும் 52,88,608 ஆடுகளும் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “காவலன் செயலி” மற்றும் அம்மா ரோந்து வாகனங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரை வைப்பு நிதியாக 10 லட்சம் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு மூன்று மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதேபோல டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின்கீழ் நிதியுதவி 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 740 கோடி ரூபாய் மானியத்தில் 2.85 லட்சம் இருசக்கர வாகனங்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு உள்ளன. மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டி, மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 45,77,484 பெண்களுக்கு 81,052 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக காவல் துறையில் சிறப்பு குற்றப்பிரிவு தொடங்கப் பட்டுள்ளது.
மேலும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம் மூலம் 1,11,444 கறவை மாடுகளும் 52,88,608 ஆடுகளும் வழங்கப்பட்டு உள்ளது. காவல் துறையில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் வழங்கிய இந்த அரசு உள்ளாட்சிகளின் 50% இடஒதுக்கீடு திட்டத்தையும் அமல்படுத்தி இருக்கிறது. இந்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்ததும் குறிப்பிடத்தக்கது. மகளிர் மேம்பாடே குடும்பத்தின் மோபாடு என்ற நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களால் தமிழக பெண்கள் தங்களது வாழ்வில் வெற்றி நடைபோடும் நிலைக்கு உயர்ந்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com