close
Choose your channels

ஹாலிவுட் நடிகருடன் ஸ்ருதிஹாசன்

Friday, May 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தில் ஸ்ருதிஹாசன் அவரது மகளாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் மனு நாராயணன் (Manu Narayan) என்பவர். இவர் ஒரு நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் சாக்ஸோபோன் வாசிப்பவர் என பல திறமைகள் கொண்டவர். இவர் அமெரிக்கா வாழ் இந்தியர் என்பதும், Good Night Good Morning, Wall Street, போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதில் கமல் படங்களை எனது பெற்றோர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளேன். ஆனால் இப்போது அவர் படத்தில் நடிக்கின்றேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, அதுவும் அவரது மகளுக்கு ஜோடியாக என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று மனு நாராயணன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment