கமல் கட்சிதான் 'ஏ' முதல் 'இசட்' வரையிலான பாஜக டீம்: தமிழ் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் ’பி’டீம் என திமுக உள்பட ஒருசில கட்சிகள் கூறிவரும் நிலையில் சமீபத்தில் கட்சி ஆரம்பித்த தமிழ் நடிகர் ஒருவர் ஏ முதல் இசட் வரையிலான டீம் கமல் கட்சி தான் என்று கூறியுள்ளார்.
சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகர் மன்சூரலிகான் புதிதாக அரசியல் கட்சி ஒன்றை சமீபத்தில் தொடங்கினார். ஆனால் அந்த அரசியல் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதால் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் தற்போது சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கமல்ஹாசன் கால்சீட் கொடுக்காமல் இங்கே வாக்கிங் சென்று வாக்குகள் கேட்டுக் கொண்டிருக்கிறார். எந்த மக்கள் போராட்டத்தில் அவர் தலைமை தாங்கி இருக்கிறார்? கவர்ச்சி அரசியலை வைத்து என்னை முதல்வர் ஆக்குங்கள் என்று கமல் கூறுவது முட்டாள்தனம். கமல் பின்னால் இருப்பது பாஜகவின் ஏ முதல் இசட் வரை அனைத்தும் டீமும் அவரது கட்சி தான் என்று கூறினார்.
மேலும் நான் கமலின் தீவிர ரசிகன் என்றும், ஆனால் அரசியலில் அவர் எனது சிஷ்யனாக உள்ளார் என்றும் கூறிய மன்சூர் அலிகான், கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிடலாம் என நினத்தேன், ஆனால் கமல்ஹாசனுக்கு அந்த தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டு தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்’ என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout