கமல் கட்சிதான் 'ஏ' முதல் 'இசட்' வரையிலான பாஜக டீம்: தமிழ் நடிகர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் ’பி’டீம் என திமுக உள்பட ஒருசில கட்சிகள் கூறிவரும் நிலையில் சமீபத்தில் கட்சி ஆரம்பித்த தமிழ் நடிகர் ஒருவர் ஏ முதல் இசட் வரையிலான டீம் கமல் கட்சி தான் என்று கூறியுள்ளார்.

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகர் மன்சூரலிகான் புதிதாக அரசியல் கட்சி ஒன்றை சமீபத்தில் தொடங்கினார். ஆனால் அந்த அரசியல் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதால் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் தற்போது சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கமல்ஹாசன் கால்சீட் கொடுக்காமல் இங்கே வாக்கிங் சென்று வாக்குகள் கேட்டுக் கொண்டிருக்கிறார். எந்த மக்கள் போராட்டத்தில் அவர் தலைமை தாங்கி இருக்கிறார்? கவர்ச்சி அரசியலை வைத்து என்னை முதல்வர் ஆக்குங்கள் என்று கமல் கூறுவது முட்டாள்தனம். கமல் பின்னால் இருப்பது பாஜகவின் ஏ முதல் இசட் வரை அனைத்தும் டீமும் அவரது கட்சி தான் என்று கூறினார்.

மேலும் நான் கமலின் தீவிர ரசிகன் என்றும், ஆனால் அரசியலில் அவர் எனது சிஷ்யனாக உள்ளார் என்றும் கூறிய மன்சூர் அலிகான், கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிடலாம் என நினத்தேன், ஆனால் கமல்ஹாசனுக்கு அந்த தொகுதியை விட்டுக் கொடுத்து விட்டு தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்’ என்று கூறினார்.
 

More News

கட்டணம் ரூ.100 மட்டுமே: ஏஜிஎஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த 'பிகில்' உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் என்பது தெரிந்ததே. இந்த நிறுவனம் தயாரிப்பு மட்டுமின்றி பல திரைப்படங்களை

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் கமிட்டான 'குக் வித் கோமாளி' புகழ்!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் காமெடி ஹீரோ என்று புகழப்படும் புகழ் ஏற்கனவே அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது தெரிந்ததே

பிரபல கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த சசிகலா…

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அமமுக-வை ஆதரிக்காத  சசிக்கலா...! உண்மையை போட்டுடைத்த சி.ஆர். சரஸ்வதி....!

டிடிவி தினகரன் அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு,

தோஷம் கழிக்க 13 வயது சிறுவனுடன் திருமணம்… பெண் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!

திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ, பெண்ணோ தங்களுக்கு ஏதோ தோஷம் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பிவிடுகின்றனர்.