எனக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்துவிட்டார்கள்: மன்சூர் அலிகான் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று திடீரென பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தனக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து விட்டார்கள் என்று மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு.

விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது எனக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.