அதிமுகவுடன் உடன்பாடில்லை: வேறொரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை: மன்சூர் அலிகான் கட்சி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் வேலூர் மற்றும் ஆரணி தொகுதிகளில் போட்டியிட போவதாக மாறி மாறி அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியாக இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த மன்சூர் அலிகான் அதிமுக தலைவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் இன்னொரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை மன்சூர் அலிகான் தலைமையிலான குழு அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை, இருப்பினும் பேச்சு வார்த்தை தொடர உள்ளது.
மேலும் அதிமுகவை தவிர்த்து வேறொரு பெரிய கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரல் தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்று தருவதில் உறுதியாக இருக்கிறோம். எனவே இந்திய ஜனநாயக புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என்று தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com