'லியோ' பாடலுக்கு டான்ஸ் ஆடிய மன்சூர் அலிகான்.. அபராதம் விதிக்க நெட்டிசன்கள் கோரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’லியோ’ படத்தில் இடம்பெற்ற ’நா ரெடி’ என்ற பாடலுக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போதே டான்ஸ் ஆடிய மன்சூர் அலிகானுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் தொழில்நுட்ப பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழ் சினிமாவில் இதுவரை செய்யாத வசூல் சாதனையை இந்த படம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய் மட்டுமின்றி சஞ்சய்தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், த்ரிஷா உட்பட பல பிரபலங்கள் ஒரே திரைப்படத்தில் இணைந்துள்ளதால் இந்த மல்டி ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’நா ரெடி’ என்ற பாடல் வெளியானது என்பதும் விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் பாடிய இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மன்சூர் அலிகான் காரை டிரைவ் செய்து கொண்டே ’நா ரெடி’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மன்சூர் அலிகான் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் சாலை விதிகளை மீறியதால் அவருக்கு அபராதம் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Mansoor Ali Khan Vibing #NaaReady 🥵 #Leo @actorvijay pic.twitter.com/3uANDuhDKV
— 𝗩𝗶𝗷𝗮𝘆 𝗧𝗵𝗲 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿ⱽᵀᴹ (@VTMOffl) June 28, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com