செம்பரம்பாக்கம் மீன் எங்க வீட்டுக்குள்ள வந்துருச்சு.. மன்சூர் அலிகானின் வெள்ள வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக பல ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த காரின் மேல் உட்கார்ந்து கொண்டு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
எங்கள் வீடு கொஞ்சம் உயரமாக இருந்ததால் நாங்கள் தப்பித்தோம். ஆனால் அதே நேரத்தில் எங்கள் வீட்டுக்குள் மீன் எல்லாம் வந்துவிட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள மீன் எங்கள் வீட்டிற்குள் வந்தது மற்றும் ஆச்சரியம் தான். நாங்கள் வீட்டில் உள்ளதை சாப்பிட்ட பிறகு அந்த மீன்களை எல்லாம் பொரித்து சாப்பிட வேண்டும். \
செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீர் திறந்து விடப்பட்டதால் எங்கள் வீடு அருகே தண்ணீர் அதிகமாகி விட்டது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி, பெரிய ஏரி, அது உடைந்து விட்டால் சென்னையே மூழ்கிவிடும். அதனால் தான் மக்களின் பாதுகாப்பு கருதி தண்ணீரை திறந்து விட்டிருக்கிறார்கள். ஏற்கனவே குஜராத்தில் ஒரு டேம் உடைந்து மோர்பி என்ற நகரமே மூழ்கி விட்டது. அதுபோல ஆகக்கூடாது என்பதற்காகத்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரை திறந்து விட்டிருக்கிறார்கள். இது பொதுமக்களுக்கு மிகவும் கஷ்டமான நிலை தான். இருப்பினும் இதிலிருந்து மீண்டும் சீக்கிரம் மக்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை கொள்கிறேன். என்ற கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com