மன்சூர் அலிகான் செய்த மகத்தான செயல்

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான மன்சூர் அலிகான் அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் அவர் சீமான் கைதை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் அம்மாபேட்டையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இந்த பணியில் அவருடைய மகளும் குளத்தில் இறங்கி ஆகாயத்தாமரையை அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதே குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய மன்சூர் அலிகான் ரூ.1 லட்சம் நன்கொடையாக கொடுத்துள்ளார். ஒருசில லட்சங்களே சம்பளம் வாங்கும் மன்சூர் அலிகான், ஒரு நல்ல காரியத்திற்காக ரூ.1 லட்சத்தை யோசிக்காமல் கொடுத்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவரை போல் பெரிய நடிகர்களும் தமிழகத்தில் உள்ள ஆறு, குளங்கள் , கண்மாய் போன்றவற்றை தூர்வார தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.