த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் கொடுத்த வாக்குமூலம் இதுதான்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட நிலையில் அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தனக்கு குரல் பிரச்சனை உள்ளதால் நாளை ஆஜராவதாக மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்பதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று பதிவு செய்யப்பட்டதால் நீதிபதி அவரை கண்டித்தார். இதனை அடுத்து மனு சரி செய்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாளை இந்த மனு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவல்துறையின் சம்மனை அடுத்து நேரில் ஆஜரான மன்சூர் அலிகான் கொடுத்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வாக்குமூலத்தில் ’செய்தியாளர்களிடம் த்ரிஷா குறித்து பேசியது நான் தான், ஆனால் ஜாலியாக தான் நான் பேசினேன். த்ரிஷா அதை தவறாக புரிந்து கொண்டார். எந்த உள் அர்த்தத்துடன் நான் பேசவில்லை. நான் பேசியதற்கு த்ரிஷா மனவருத்தம் அடைந்திருந்தார் என்பதை அறிந்தேன். நானும் அதற்காக மனம் வருத்தம் அடைகிறேன்.
நான் குரல் பிரச்னைக்காக நாளை ஆஜராகலாம் என்று இருந்தேன். ஆனால் நான் தலைமறைவாகிவிட்டேன் என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் இன்றே ஆஜராகி உள்ளேன். இந்த வழக்கு விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஜராகி நான் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments