ரஜினிக்கு சவால் விடுத்த மன்சூர் அலிகான்: மொட்டை அடிப்பதாகவும் அறிவிப்பு!
- IndiaGlitz, [Sunday,August 25 2019]
ஒரு திரைப்படத்தை பிரபலப்படுத்த வேண்டாம் என்றால் அந்த படத்தின் புரமோஷன் விழாவில் ரஜினியை பற்றி தாக்கி பேசினால் போதும் என்ற யுக்தியை கடந்த சில வருடங்களாக ஒருசில திரையுலகினர் கடைபிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினியை விமர்சனம் செய்து பரபரப்பு ஏற்படுத்தி அதில் புகழ் பெறும் கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி. இந்த கட்சியின் நிர்வாகியாக இருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் தனது மகன் கதாநாயகனாக நடிக்கும் 'கடமான் பாறை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மன்சூர் அலிகான் சம்பந்தமே இல்லாமல் ரஜினியை விமர்சனம் செய்தார். அவர் கூறியதாவது:
நான் என்றுமே ரஜினிகாந்த் ரசிகன் தான். அவருடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளேன். ஆனால் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அந்த சம்பவத்திற்கு காரணம் தீவிரவாதிகள் என்று ரஜினிகாந்த் சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவர் சொன்னதை அவர் என்றைக்கு இருந்தாலும் நிரூபித்தே ஆகவேண்டும். அவ்வாறு அவர் நிரூபித்துவிட்டால் நான் மொட்டை அடித்து கொள்ளவும் தயார் என்று சவால் விட்டார்.
ரஜினி சம்பாதித்த ஒவ்வொரு காசும் தமிழ் மக்கள் கொடுத்த காசு என்று கூறிய மன்சூர் அலிகான், தொழிலாளித்தத்துவம் தான் ஜெயிக்கும் என்றும், ரஜினி நினைப்பதுபோல் முதலாளித்துவம் என்றும் ஜெயிக்காது என்றும் தெரிவித்தார். கடம்பன் பாறை' படத்திற்கும் ரஜினி குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாமல் இந்த விழாவிற்கு வந்தவர்கள் குழப்பம் அடைந்தனர்.