சென்னை வெள்ளத்தில் படகில் சென்ற மன்சூர் அலிகான்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்பதும் இதனால் படகில் தான் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் வீடு அருகே மழை நீர் அதிகம் தேங்கி உள்ளதை அடுத்து அவர் படகில் சென்று பாட்டு பாடிக்கொண்டே படகில் செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ்நாட்டில பொறக்கணும்
சென்னையில தண்ணியில மிதக்கணும்

பொறந்தா தமிழனாக பொறக்கணும்
சென்னையில காரு ஓட்டி மகிழணும்

என்று பாடி கொண்டே படகில் செல்லும் மன்சூர் அலிகான், ‘தமிழ்நாட்டில் உள்ள காவிரி பாலாறு தேனாறு எல்லா ஆறுகளும் சென்னையில் தான் ஓடுகிறது என்று கேலியாக பாட்டு பாடியவாறு படகில் செல்கிறார். மன்சூர் அலிகானின் இந்த வீடியோவை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.