மன்சூர் அலிகான் ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை விசாரணை செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் பாரத பிரதமர் தமிழகத்திற்கு வருகை தந்தபோது கருப்புக்கொடி காட்டியதற்காக சீமான், பாரதிராஜா உள்ளிட்டவர்களை கைது செய்த போலீசார் பல்லாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில் இவர்களில் சீமானை மட்டும் வேறொரு வழக்கில் கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததாக தகவல் பரவியது

இதனையடுத்து அந்த மண்டபத்தை சுற்றி நாம் தமிழர்கள் தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுடன் நடிகர் மன்சூர் அலிகானும் இணைந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். சீமானை கைது செய்வதாக இருந்தால் தன்னையும் கைது செய்யும்படி அவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்

இந்த நிலையில் மறுநாள் கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தரப்பினர் அவரை ஜாமீனில் விடுவிடுக்கும்படி தாக்கல் செய்திருந்த மனு இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்

More News

மும்பை ஆசிரமத்தில் ஒரு மாதம் இருந்தாரா நிர்மலாதேவி?

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நிர்மலாதேவி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

சானியா மிர்சாவுக்கு கிடைக்கும் புதிய பதவி

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பமாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை விட்டே சென்றுவிடுவேன்: ஞானவேல்ராஜா கூறியது ஏன்?

முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேராஜா. இவரது தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடித்த '‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை!

சென்னையில் கடந்த சில நாட்களாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

எச்.ராஜா, கனிமொழி கேள்விகளை ரஜினிகாந்த் தவிர்ப்பது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிர்மலாதேவி விவகாரம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த்,