பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல வில்லன் நடிகர் மற்றும் பாடகர் பங்கேற்பா?

விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வரும் என்பதும் கடந்த நான்கு சீசன்களில் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஐந்தாவது சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானதை அவ்வப்போது பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் ஒருவரும் பாடகர் ஒருவரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் நடித்த ’கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க தொடங்கிய மன்சூர் அலிகான் அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதேபோல் பாடகர் அந்தோணிதாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களிலும் ஒரு பாடகர் போட்டியாளராக இருந்த நிலையில் 5 வது சீசனில் அந்தோணிதாசன் போட்டியாளராக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.