'அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறேன்' என்று கூறுபவர்களை உதைப்பேன். மன்சூர் அலிகான்
- IndiaGlitz, [Saturday,July 01 2017]
நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரி பல துறைகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சினிமாத்துறைக்கு பேரிழப்பு என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது:
டாஸ்மாக் சரக்கிற்கும் பெட்ரோலுக்கும் ஜிஎஸ்டி வரி கிடையாது. இதில் இருந்தே இந்த வரிவிதிப்பு எவ்வளவு பெரிய மோசடி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வரியை சில ஊடகங்கள் ஆதரித்து மத்திய அரசுக்கு ஜால்ரா போடுகிறது. இந்த ஊடகங்களையும் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்
ஏற்கனவே உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சினிமாத்துறையினர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் சினிமாக்காரர்களுக்க்கு மட்டுமின்றி பொதுமக்களையும் வாட்டி வதைக்க வந்துள்ளது இந்த ஜிஎஸ்டி
மக்களை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டிக்காக இணைந்த மத்திய அரசும் மாநில அரசும் ஏன் நதிநீரை இணைக்க இணையவில்லை. முதலில் நதிநீரை இணைங்கடா விளக்கெண்ணெய்களா?
ஜிஎஸ்டியால் சினிமா அழிவை நோக்கி செல்லும், இதை எங்களால் ஏற்று கொள்ள முடியாது. மேலும் ஜெயலலிதா இருந்தவரை அவர் ஜிஎஸ்டியையும், நீட் தேர்வையும் எதிர்த்து வந்தார். ஆனால் இன்றைய அரசு எடுபிடி அரசு. எவனாவது அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறினால் உதைப்பேன்' என்றும் ஆவேசமாக கூறினார்.