மது கிடைக்காததால் விபரீத செயலில் ஈடுபட்ட மனோரமா மகன்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது
பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக மனோரமாவின் மகன் பூபதி, மதுவுக்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளடால் மதுக்கடை அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மது கிடைக்காததால் மனமுடைந்த மனோரமாவின் மகன் பூபதி, போதைக்காக தூக்க மாத்திரையை அதிக அளவில் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போது அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது
மதுவுக்கு அடிமையான பலர் மதுவுக்கு பதிலாக வேறு சிலவற்றைக் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையிலும், உயிரிழந்தும் வரும் நிலையில் பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகனும் அதேபோல் செய்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout