இந்த கிரிக்கெட் வீரர் போட்ட டுவிட்ட கொஞ்சம் பாருங்க!
- IndiaGlitz, [Thursday,February 04 2021]
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சமீபத்தில் பாப் பாடகி ரிஹானா டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார். ‘விவசாயிகளின் இந்த போராட்டத்தை நாம் ஏன் பேசாமல் இருக்கிறோம்? என்று அவர் கேட்ட ஒரே ஒரு கேள்வி இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரிஹானாவின் இந்த டுவிட்ட்டை அடுத்து பல கிரிக்கெட் வீரர்களும் திரை உலக பிரபலங்களும் பொங்கி எழுந்து தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் இந்தியாவின் இறையாண்மை குறித்தும், வேற்றுமையில் ஒற்றுமை குறித்தும் இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளை இந்தியாவில் உள்ளவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்றும் பொங்கி எழுந்தனர்.
பிரபலங்களின் இந்த கருத்துக்கள் அனைத்தும் நிர்ப்பந்தம் காரணமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வந்தனர். தமிழக எம்பி கார்த்திக் சிதம்பரமும் இதுகுறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியபோது ’நான் குழந்தையாக இருந்தபோது பொம்மலாட்டம் நிகழ்ச்சியை பார்த்ததில்லை. ஆனால் எனக்கு 35 ஆண்டுகள் கழித்து தற்போது பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தற்போது நடந்து வரும் நிகழ்வுகளை குறிப்பிடும் வகையில் உள்அர்த்தத்துடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளது. மனோஜ் திவாரியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
When I was a kid, I never saw a puppet show. It took me 35 years to see one ?? pic.twitter.com/AMCGIZMfGN
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 4, 2021