பாரதிராஜா மகனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படம்
- IndiaGlitz, [Wednesday,May 04 2022]
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மனோஜ் பாரதிராஜாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்களை ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை நந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்த்திகா மற்றும் மதுவதனி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மனோஜ் பாரதிராஜா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் அவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மனோஜ் பாரதிராஜாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என்றும், விரைவில் ஹீரோயின்களாக அவர்களை எதிர்பார்க்கலாமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ மற்றும் ’மாநாடு’ திரைப்படங்களில் நடித்த மனோஜ் பாரதிராஜா, அடுத்ததாக ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.