சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

  • IndiaGlitz, [Tuesday,February 04 2020]

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் கோவையில் நடைபெற உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதம் நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பில் அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தில் ஏற்கனவே எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடிக்கவுள்ள நிலையில் தற்போது புதிய இணைப்பாக இந்த படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணைந்துள்ளார். சிம்புவின் திரைப்படத்தில் பாரதிராஜாவும் அவரது மகனும் இணைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் டேனியலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் சிம்பு அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிம்பு இந்த படத்தில் ஒரு முஸ்லிம் கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது