தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதை செய்யுங்கள்: மனோபாலா வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை நடிகர்-நடிகைகள் தொடர்ந்து மன அழுத்தம் காரணமாகவும், பணிச்சுமை காரணமாகவும்ம் வாய்ப்பு கிடைக்காத காரணங்களாலும்ம் வறுமை உள்ளிட்ட காரணங்களாலும் அவ்வப்போது தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் தயவுசெய்து பணிச்சுமையை உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என மனோபாலா கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சித்ராவின் அறையில் இருந்த அவரது கணவர் என்று கூறப்படும் ஹேமந்த் ரவி என்பவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ராவின் மரணம் குறித்து சின்னத்திரை மற்றும் பெரியதிரை நடிகரும் இயக்குனருமான மனோபாலா அவர்கள் கூறியபோது ’சித்ரா மிகவும் வலிமையான பெண் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சின்னத்திரையில் இதுபோன்ற தற்கொலைகள் அடிக்கடி நடக்கிறது. மன் அழுத்தம் உள்ளிட்ட எந்த ஒரு வேதனையையும் மனதுக்குள்ளே பூட்டி வைக்க வேண்டாம். நண்பர்களிடம் தயவு செய்து பகிருங்கள். நண்பர்கள் கண்டிப்பாக உதவி செய்ய தயாராக இருப்பார்கள். நாங்களும் உதவி செய்வோம். எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் அவசரப்பட்டு இதுபோன்ற முடிவு எடுக்காதீர்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது. எல்லோரும் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன் தயவுசெய்து நண்பர்களிடம் மனம்விட்டு பேசுங்கள், மன அழுத்தம் நீங்கிவிடும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது என்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்த வைஷ்ணவி என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். வம்சம், தென்றல் உள்ளிட்ட தொடர்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதேபோல் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் மன அழுத்தம் காரணமாகவும், ஷோபனா என்ற சின்னத்திரை நடிகை மன இறுக்கத்திற்கு ஆளாகியும் தற்கொலை செய்து கொண்டனர்.
மண் வாசனை உள்ளிட்ட தொடர்களில் நடித்த பிரதியுஷா கடந்த ஏப்ரல் மாதம் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சாய் பிரசாந்த் என்ற நடிகர் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். சொந்த பந்தம் தொடர் நடிகை சபர்ணா மற்றும் மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை ஸ்ரவானி ஆகியோர் தங்கள் வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments