'வலிமை'யால் ஏமாந்த நடிகர் மனோபாலா: ரசிகர்கள் அலர்ட் செய்ததால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Thursday,July 15 2021]

’வலிமை’ படத்தின் அடுத்த லுக் வருவதாக ஃபேக் ஐடி செய்தி வெளி வந்ததை பார்த்து ஏமாந்த நடிகர் மனோபாலாவை ரசிகர்கள் அலர்ட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் அப்டேட் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் போதும் போதும் என்ற அளவிற்கு ’வலிமை’படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் என வரிசையாக அப்டேட் வந்து கொண்டே இருந்ததால் அஜித் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். மேலும் ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் இயக்குனர் எச் வினோத்தின் ட்விட்டர் பக்கத்தில் ’வலிமை’ படத்தின் இன்னொரு லுக் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து நடிகர் மனோபாலா அதற்கு ‘வெயிட்டிங்’ என்று ரிப்ளை செய்து இருந்தார்.

ஆனால் ரசிகர்கள் உடனடியாக அவரை அலர்ட் செய்தனர். இயக்குனர் எச் வினோத்துக்கு ட்விட்டரில் அக்கவுண்டே இல்லை என்றும் அது ஃபேக் ஐடி என்றும் கூறினர். இதனை அடுத்து மனோபாலா சுதாரித்துக் கொண்டு ’ஓஹோ’ என்று பதிலளித்துள்ளார். ’வலிமை’ திரைப்படத்தின் அடுத்த லுக்கை எதிர்பார்த்து ஏமாந்த மனோபாலாவை ரசிகர்கள் அலர்ட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.