கணவன் மனைவியை அண்ணன் தங்கையாக மாற்றிய சுந்தர் சி
Send us your feedback to audioarticles@vaarta.com
சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' திரைப்படம் ஜனவரி 29ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 'அரண்மனை' படத்தின் தொடர்ச்சியா? அல்லது முற்றிலும் புதிய கதையா? என்பது குறித்து கோலிவுட்டில் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த படம் முழுக்க முழுக்க 'அரண்மனை' படத்தில் இருந்து வேறுபட்ட படம் என்றும், 'அரண்மனை' படத்தின் தொடர்ச்சி 'அரண்மனை 2' அல்ல என்றும் சுந்தர் சி தெளிவாக விளக்கியுள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் 'அரண்மனை' படத்தில் மனோபாலா - கோவை சரளா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்ததாகவும், ஆனால் 'அரண்மனை 2' படத்தில் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி, சதீஷ், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com