குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி: சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ஆனார் பெரியதிரை நடிகர்!

  • IndiaGlitz, [Saturday,October 03 2020]

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் கடந்த சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது புதிய தலைவராக நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட கடந்த ஆண்டு மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டது. இந்த கலை விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவி வர்மா என்பவர் மிகப்பெரிய அளவில் பண மோசடி செய்ததாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இதனை அடுத்து சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவி வர்மா மற்ற உறுப்பினர்களை மிரட்டியதாக கூறப்பட்டதால் துணை தலைவர் பதவியில் இருந்த நரேன் ராஜினாமா செய்தார். மேலும் போஸ் வெங்கட் உள்பட ஒருசில உறுப்பினர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது சங்க விதிகளின்படி ரவிவர்மாவை தலைவர் பதவியிலிருந்து நீக்கி இருப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரிஷிகேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக ஒருமனதாக நடிகர், இயக்குனர் மனோபாலா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு நேற்று கூடியதாகவும், இதில் ஏகமனதாக மனோபாலா அவர்கள் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் பொதுச் செயலாளர் ரிஷிகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

More News

விஜய்சேதுபதி-டாப்ஸி படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில்

தோற்றாலும் நாங்கள் உங்கள் பக்கம்தான் தோனி: பிரபல தமிழ் நடிகை

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - ஹைதராபாத் மல்லுக்கட்டி வீழ்ந்த சிஎஸ்கே!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது

நாம் புதிய இந்தியாவில் இருக்கிறோம்: ஹாத்ராஸ் சம்பவம் குறித்து மாளவிகா மோகனன்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற வெற்றி பட இயக்குனர்!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி நடித்து வரும் அடுத்த திரைப்படம் 'சத்திய சோதனை' என்பதும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும்