குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி: சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ஆனார் பெரியதிரை நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் கடந்த சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது புதிய தலைவராக நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட கடந்த ஆண்டு மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டது. இந்த கலை விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவி வர்மா என்பவர் மிகப்பெரிய அளவில் பண மோசடி செய்ததாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இதனை அடுத்து சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவி வர்மா மற்ற உறுப்பினர்களை மிரட்டியதாக கூறப்பட்டதால் துணை தலைவர் பதவியில் இருந்த நரேன் ராஜினாமா செய்தார். மேலும் போஸ் வெங்கட் உள்பட ஒருசில உறுப்பினர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் தற்போது சங்க விதிகளின்படி ரவிவர்மாவை தலைவர் பதவியிலிருந்து நீக்கி இருப்பதாக சங்கத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரிஷிகேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக ஒருமனதாக நடிகர், இயக்குனர் மனோபாலா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு நேற்று கூடியதாகவும், இதில் ஏகமனதாக மனோபாலா அவர்கள் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் பொதுச் செயலாளர் ரிஷிகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இன்று 02.10.2020 நடந்த சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக திரு @manobalam அவர்கள் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்துஎடுக்கப்பட்டார் என்பதை மிகவும் சந்தோஷத்தோடு தெரியப்படுத்திகிறோம்
— Diamond Babu (@idiamondbabu) October 3, 2020
ரிஷி-
பொதுச்செயலாளர் pic.twitter.com/oeYwb6QgLy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com