'மன்னார் வகையறா' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

கடந்த 2016ஆம் ஆண்டு விமல் நடித்த 'மாப்பிள்ளை சிங்கம்' படத்திற்கு பின்னர் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் விமல் படம் வெளியாகாத ஆண்டு 2017 மட்டுமே.

இந்த நிலையில் விமல் நடித்த 'மன்னார் வகையறா' திரைப்படம் ரிலீசுக்கு தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்த படம் நேற்று தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்த நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெகுவிரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்

விமல், அஞ்சலி, சூரி, ராதாரவி, பாண்டியராஜன், ஜி.மாரிமுத்து, காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தருண்பாலாஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.