ரூபாய் நோட்டு விவகாரம் திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை. மன்மோகன் சிங் பாய்ச்சல்

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

ஊழல் பணம், கருப்புப்பணம், கள்ள நோட்டுக்கள் ஆகியவற்றை ஒழிக்க மத்திய அரசு சமீபத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் உண்மையிலேயே கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள் பாதிக்கப்படவில்லை என்றும் சாமான்ய மக்கள் கடும் துன்பத்தை கடந்த 15 நாட்களாக சந்தித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி மேல் இருந்த மரியாதை சாமான்ய மக்களுக்கு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை தோல்வி அடைந்தது குறித்து பேசிய 10 முக்கிய அம்சங்கள்:
1. ஊழல், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எதிர்க்கத்தக்கது அல்ல. ஆனால், ரூ.500, 1000 செல்லாது என்ற உத்தியை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்.
2. ரூபாய் நோட்டு நடவடிக்கையை செயல்படுத்திய விதத்தால், ரிசர்வ் வங்கி மோசமான நிர்வாகத்துக்கு முன்னுதாரணம் ஆகிவிட்டது.
3. அவசரகதி அறிவிப்புகள் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பை குறைத்துவிடும்.
4. மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையானது, திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை.
5. காலம் கடந்துவிட்டாலும்கூட ஏழை மக்களின் துயர் துடைக்க இப்போதாவது பிரதமர் மோடி ஏதாவது நடைமுறைக்கு சாத்தியப்பட்ட நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.
6. மத்திய அரசு சொல்வது போல நோட்டு நடவடிக்கையின் தாக்கம் சீரடைய 50 நாட்கள் ஆகும் என்றால், இந்த 50 நாட்களும் சாமானிய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்ற நிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
7. ஒரு நாட்டின் மக்கள் வங்கிகளில் தாங்கள் செலுத்திய பணத்தையே எடுக்க முடியாத நிலை வந்துள்ளது யோசித்துப் பார்க்க முடியாத நிகழ்வு. உயர் மதிப்பு நோட்டுகளை முடக்கியுள்ள செயல், மக்கள் மத்தியில் ரூபாய் மீதும், வங்கிகள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யும்.
8. நோட்டு நடவடிக்கையால் சாமானிய மக்கள் மட்டுமின்றி, அமைப்பு சாரா தொழில்கள், வேளாண் துறை, சிறு - குறு தொழில்கள், கூட்டுறவு சேவைகள் முடங்கியுள்ளன. இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
9. மத்திய அரசின் இந்த நோட்டு நடவடிக்கையால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 2% வரை குறையலாம். நான் குறைவாக கணித்திருக்கிறேன். இதற்கும் அதிகமான அளவில்கூட ஜிடிபி குறைய வாய்ப்புள்ளது.
10. நீங்கள் (மத்திய அரசு) சொல்வது போல் இது நீண்டகால நலத் திட்டம் எனில், எனக்கு நினைவுக்கு வரும் ஜான் கென்னியின் வார்த்தைகள்: "நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம்".
மன்மோகன் சிங் அவர்களின் இந்த ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

வேந்தர் மூவீஸ் மதனுக்கு எத்தனை மனைவிகள்? காதலிகள் உண்டா? தாயார் விளக்கம்

கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவீஸ் மதன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது....

கே.வி.ஆனந்த்-விஜய்சேதுபதியின் 'கவண்' ரிலீஸ் எப்போது?

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடித்துள்ள 'கவண்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது...

முதன்முதலாக கவுதம் மேனனுடன் இணையும் பிரபல ஹீரோ

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், அஜித்குமார், சூர்யா, சரத்குமார், தனுஷ், சிம்பு, என ரஜினி, விஜய்...

பெங்களூரில் ஏ.டி.எம் பணத்துடன் காணாமல் போன வேன் கண்டுபிடிப்பு

நேற்று பெங்களூரில் உள்ள கே.ஜி. சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்-க்கு பணம் நிரப்ப வந்த வேன் ரூ.1.37...

ரூ.500, ரூ.1000-க்கு இன்று கடைசி நாள். சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்...