'மங்காத்தா' படத்தின் அன்சீன் புகைப்படம்: வைரலாக்கும் அஜீத் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று ’மங்காத்தா’ என்பதும் இந்த படம் அவருடைய ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்தின் திரையுலக வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய இந்த படம் இப்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போது ஏராளமானோர் முதலிலிருந்து இறுதிவரை பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’மங்காத்தா’ போன்ற இன்னொரு திரைப்படம் அஜித் நடிப்பில் வராதா என்று அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அன்சீன் புகைப்படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் நாயகி த்ரிஷா சோபாவில் உட்கார்ந்து இருப்பது போன்றும் அஜித் தரையில் உட்கார்ந்து த்ரிஷாவின் மடியில் கை வைத்து இருப்பது போன்றும் உள்ள இந்த புகைப்படத்தை தற்போது அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் பகிர்ந்து வருவதால் சமூக வலைதள ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Here's an unseen still from #Mankatha! How do you like it?#ThalaAjith #Trisha #FromOurVault pic.twitter.com/F0RXhupDAC
— Sun Pictures (@sunpictures) December 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com