ப்ளாக்பஸ்டர் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படம்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான, இயக்குநர் சிதம்பரத்தின் சர்வைவல் த்ரில்லரான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படத்தை, வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது.
ஒரு சர்வைவல் படத்திற்கான கச்சிதமான திரைக்கதையுடன், நட்பின் வலிமையைப் பேசிய ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றது, இன்று வரை தமிழில் வெற்றி பெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை புரிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்திற்கு தங்கள் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தனர். சிஎஸ்கே வீரர்களுடன் 'தல' எம்எஸ் தோனி ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அந்த பயணத்தின் போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள், அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட நண்பனைக் காப்பாற்ற போராடுகிறார்கள், அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா? என்பது தான் ’மஞ்சும்மேல் பாய்ஸ்’ படம். மனித மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் நட்பின் பெருமையை அழகாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.
சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷியாம் இசையமைக்க, ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தை கண்டுகளியுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments