ரூ.80 கோடி மோசடியா? 'மஞ்சும்மெல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் வங்கிக்கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தவு..!
- IndiaGlitz, [Saturday,April 13 2024]
சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மலையாள திரைப்படமான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்ளின் வங்கி கணக்கை முடக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடித்த ’குணா’ படத்தின் ரெப்ரன்ஸ் உடன் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் மலையாள திரை உலகில் இதுவரை இல்லாத அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள அரூர் என்ற பகுதியை சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்திற்காக நான் 7 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். படத்தின் தயாரிப்பாளர்கள் படம் வெளியான பிறகு லாபத்தில் 40 சதவீத தொகையை பங்காக தருகிறேன் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த வழக்கு நீதிபதி சுனில் என்பவர் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பின்னர் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோர்களது வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் 40 சதவீத பங்கு தொகை என்றால் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பாக தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.