மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத சாதனையை செய்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.. இதுதான் உண்மையான வெற்றி..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத வசூல் சாதனையை ஒரு சின்ன பட்ஜெட் படம் செய்திருப்பதை பார்த்து மலையாள திரை உலக மட்டும் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரை உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் கமல்ஹாசனின் ’குணா’ படத்தின் ரெஃபரன்ஸ் கொண்டது என்பதும் இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது மட்டுமின்றி இந்த படம் தமிழகத்திலும் மலையாளத்தில் ரிலீஸானது என்பது தெரிந்ததே. மேலும் தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள் என்பதும் மலையாளத்தை விட இந்த படம் அதிகமாக தமிழில் தான் வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் 100 கோடி, 150 கோடி மற்றும் சில நாட்களுக்கு முன் 175 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 கோடி என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட செய்யாத வசூல் சாதனையை வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அறிமுக நடிகர்கள் நடித்த படம் வசூல் செய்திருப்பது தான் உண்மையான வெற்றி என்று கூறப்படுகிறது.

இதில் இருந்து ஒரு படத்தின் வெற்றிக்கு பிரபல ஸ்டார்கள், பிரபல இசையமைப்பாளர்கள், பிரபல இயக்குனர்கள் தேவையில்லை நல்ல கதை இருந்தால் போதும் என்பது 100% நிரூபித்த படம் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்றும் திரையுலகினர் கூறி வருகின்றனர். இதனை அடுத்து ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

இந்திக்கு செல்கிறதா 'அரண்மனை' திரைப்படம்.. சுந்தர் சி உடன் இணையும் பாலிவுட் பிரபலம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனரான சுந்தர் சி விரைவில் பாலிவுட்டில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் இந்த படம் 'அரண்மனை' படத்தின் ஒரு பாகத்தின் ரிமேக் என்றும் கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் மைதானம் முழுவதும் சிஎஸ்கே போஸ்டர்கள்.. என்ன நடக்குது 'கோட்' படப்பிடிப்பில்?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இருப்பதாகவும்

ரூ.2 கோடி மதிப்பில் பிரமாண்ட செட்.. இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு.. ஜெயம் ரவி படத்தின் அப்டேட்..!

நடிகர் ஜெயம் ரவி தற்போது கமல்ஹாசன் உடன் 'தக்லைஃப்', எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிரதர்' மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜெனி 'ஆகிய மூன்று

கேரளா சென்ற விஜய்க்கு நேர்ந்த விபரீதம்.. ரசிகர்களின் அன்புத்தொல்லையால் ஏற்பட்ட சேதம்..!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற இருப்பதாகவும்

சூர்யாவின் 'புறநானூறு' படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு.. ரசிகர்கள் அதிருப்தி..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'புறநானூறு' என்ற படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்திக்கு