தமிழ் ரசிகர்களின் ரசனை வித்தியாசமாக உள்ளது.. புது அனுபவமாக இருந்தது.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்' இயக்குனர்..!

  • IndiaGlitz, [Saturday,March 09 2024]

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஏற்கனவே ’குணா’ படம் பார்த்தவர்களுக்கு இந்த படத்தில் ’குணா’ படத்தின் காட்சிகளை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இதன் காரணமாக இந்த படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த படம் மலையாளத்தில் நேரடியாக மொழி மாற்றம் இன்றி ரிலீஸ் செய்யப்பட்டாலும் தமிழக ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். கேரளாவை விட தமிழகத்தில்தான் இந்த படத்திற்கு அதிக வசூல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் இயக்குனர் சிதம்பரம் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தமிழகத்தில் இந்த படத்தை ரசிகர்களுடன் பார்த்தபோது தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருவதையும், உணர்ச்சிகரமாக ஒரு படத்தை பார்க்கும் தமிழ் ரசிகர்களின் ரசனை தனக்கு புது அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார். இந்த பேட்டியில் முழு வீடியோ இதோ: